1. சுவாமி சிவானந்தர் 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை என்ற ஊரில் பிறந்தார்.
2. சிறு வயதிலேயே கல்வி, கலை, விளையாட்டு, ஆன்மிகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கினார்.
3. மருத்துவப் படிப்பு படித்து மலேசியாவில் மருத்துவராகப் பணிபுரிந்தார். ஏழை எளியவர்களுக்கு இலவச சிகிச்சை நிறைய செய்தார்.
4. அக்காலத்தில் பணிகளுக்கிடையே சத்சங்கம், பஜனை ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டி வந்தார்.
5. சில ஆண்டுகளில் ஆன்மீக நாட்டம் மேலோங்க, தன் மருத்துவப் பணியைத் துறந்து இந்தியா திரும்பி, கடுமையான தவத்திற்குப் பிறகு ரிஷிகேசத்தில் தெய்வ நெறிக் கழகம் என்ற ஆசிரமம் தொடங்கி, ஆன்மீக வேட்கை கொண்ட இளைஞர்களுக்குத் தன்னுடைய கருத்துக்களை சொற்பொழிவுகள், புத்தகங்கள் வாயிலாகவும், மற்றும் சுற்றுபயணங்கள்மூலமாகவும் பரப்பினார்.
6. மனிதநேயம் மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்தவர் சிவானந்தர். ‘வாழ்வின் இறுதி நிமிடம் இது’ என்று வழி தெரியாமல் நின்றவர்கள்கூட, அவரது வழிகாட்டுதலால் வாழ்க்கையின் உன்னதத்தை அறிந்து மீண்டிருக்கிறார்கள்….
7. முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், சுவாமி சிவானந்தரையே தனது குருவாகக் கூறுவார். அப்துல் கலாமின் வாழ்க்கையிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் சுவாமி சிவானந்தர்.