பெங்களூரு. கர்நாடகாவின் ஷிவமோக்கா மாவட்டத்தில், சமீபத்தில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத ஆதரவு அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாணவர் அமைப்பாக செயல்பட்டு வந்த தடை செய்யப்பட்ட கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியாவில் மக்கள் இணைய வேண்டும் என்று கிராஃபிட்டிகள் வரையப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவமோகாவின் ஷிகாரி பகுதியில் சுமார் ஒன்பது இடங்களில் இத்தகைய கிராஃபிட்டிகள் எழுதப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் காவல் துறையினர் ரோந்து சென்ற போது இந்த கிராஃபிட்டி கவனிக்கப்பட்டது. உடனடியாக இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இருளில் இந்த சுவரெழுத்துகளுக்கு வர்ணம் தீட்டியவர்கள் மற்றும் அதற்கு தலைமை தாங்கியவர்கள் பற்றிய சில தகவல்கள் கிடைத்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிசிடிவி காட்சிகளை சரிபார்த்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.