மும்பை தாக்குதல் இஸ்லாமிய பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி

0
232

மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி தஹவூர் ராணாவை இந்தியாவிற்கு நடத்து கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மும்பையில், 2008 ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் முக்கிய குற்றவாளியான டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு 35 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவரது நண்பரும், தாக்குதல் திட்டத்திற்கு உதவியவருமான கனடாவில் வசித்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் தஹவூர் ராணா 2020ம் ஆண்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். தாக்குதல் வழக்கில், இவரது பங்கு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, நாடு கடத்தக் கோரி அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மனு தாக்கல் செய்தது. லாஸ் ஏஞ்சல்சின் மத்திய மாவட்ட நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியன் மே 16 ல் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்தலாம். அவர் மீது குற்றம்சாட்டப்பட்ட குற்றங்களுக்காக நாடு கடத்தலாம் என உத்தரவு பிறப்பித்து உள்ளது.
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here