அப்போது:
குக்கிக்களுக்கும் நாகாக்களுக்கும் இடையே மிகப் பெரிய அளவில் மோதல் 1993 ஏப்ரலில் தொடங்கி டிசம்பர் வரை 9 மாதங்கள் நீடித்தது. அதன் வடுக்கள் மறைந்திட 10 வருடங்களாகின.
மோதலில் சுமார் 750 பேர் கொல்லப்பட் டனர். 350 கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.பி.வி. நரசிம்ஹ ராவ் பிரதமர். கலவரத்தைக் கட்டுப்படுத்திட மத்திய போலீஸ் படை 14 நாட்களுக்குப் பிறகு தான் மணிப்பூரை சென்றடைந்தது. நாடாளுமன்றத்தில் அப்போதைய உள்துறை இணை அமைச்சர் ஒருவர் மட்டுமே உறுப்பினர்கள் எழுப்பிய வினாவிற்கு பதில் அளித்தார்.பின்னர் கலவரப் பகுதிகளை நேரில் பார்வையிட மணிப்பூருக்குச் சென்றார். மணிப்பூரில் அவர் இருந்தது மொத்தம் 3.5 மணி நேரம். அதில் 2 மணி நேரம் விமான நிலையத்திலும், ஒரு மணி நேரம் முதலமைச்சர் வீட்டிலும் சென்றுவிட்டது. வேறு எங்கும் சென்று எவரையும் சந்திக்கவில்லை.
இப்போது:
மோதி ஆட்சியில், 36,000 மத்திய பாது காப்புப் படையினர் 30 மணி நேரத்திற்குள் மணிப்பூர் சென்றடைந்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரிடையாக மணிப்பூருக்குச் சென்று முழு 2 நாட்கள் (3 இரவுகள்) தங்கியிருந்து நிலைமையை அறிந்து கொண்டார். நாடாளுமன்றத்தில் வெறும் அறிக்கையு டன் நின்றுவிடாமல் மணிப்பூர் விவகாரம் பற்றி முழுமையாக விவாதம் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளார். வழக்கம் போல் எதிர் கட்சியினர் அதற்குத் தயாரில்லை.செக்யூலர், லிபரல், கம்யூனிச வாதிகள் மணிப்பூர் பற்றி பிரதமர் மோதிக்கு கவலையில்லை என்றும், காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே அதில் அக்கறை இருப்பதாகவும் போடும் நாடகத்தில் கிலிசரின் ரொம்பவே பயன்படுத்தியதால் கண்களிலிருந்து அருவியாகக் கண்ணீர் கொட்டுவதைக் காண முடிகிறது.