தேச விரோதி 100 க்கு அதிகமானோரின் OCI Card ரத்து

0
157

தேச விரோதிகளுக்கு மத்திய அரசு கொடுத்துள்ள அடுத்த அதிர்ச்சி.ஸ்வீடனில் வசித்து வருகிற பேராசிரியர் அசோக் ஸ்வைனின் (Ashok Swain) OCI கார்டு பதிவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
ஸ்வீடனில் இருந்து கொண்டு பாரதத்தை சிறுமைப்படுத்தும் வகையில் அவதூறு ப்ரசாரம் செய்து வருபவர். பாரதத்திற்கு எதிரான மனப்பான்மை கொண்டவர். OCI Card ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து நீதி மன்றம் சென்ற பேராசிரியர் அசோக் ஸ்வைனுக்கு அங்கும் வெற்றி கிடைக்க வில்லை.
100 க்கும் அதிகமான அமெரிக்கா & இங்கி லாந்து நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த OCI அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இவர்கள் இனிமேல் பாரதத்திற்கு வந்து செல்ல முடியாது. அயல் நாடுகளில் நிரந்தரமாகக் குடியேறி விட்ட பாரதீயர்களுக்கும், பாரதீய வம்சா வளியினருக்கும் (OCI Card) Overseas Citizen of India என்ற தகுதியை மத்திய வழங்கி வருகிறது.
இத்திட்டம் கடந்த 9 வருடங்களாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. OCI Card பெற்றுள்ளவர்களுக்கு இதனால் எண்ணற்ற பயன்கள் கிடைத்து வருகிறது. வெளிநாடுகளில் நிரந்தரமாகக் குடியேறி விட்ட சிலர் அங்கிருந்து கொண்டு பாரதத்தின் ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் விரோதமாக செயல்பட்டு வருகின்றனர். அதில் ஒருவர் இந்த பேராசிரியர் அசோக் ஸ்வைன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here