பாரதத்தில் இப்போது ஆட்சி செய்வது முந்தைய யூ.பி.ஏ. ஆட்சி அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது பாரத அரசு.

0
104

ஃப்ரெஞ்ச் பத்திரிக்கையாளர் Vanessa Dougnac பாரதத்தை விட்டு ஃப்ரான்ஸ் திரும்புகிறார். பாரதத்தை விட்டு வெளியேறும் படி கட்டாயப் படுத்தப்பட்டேன் என்று Vanessa Dougnac தெரிவித்துள்ளார். நமது நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் வெளிநாடுகளுக்கு தொடர்ந்து தவறான செய்திகள் அனுப்பி வந்ததால் மத்திய அரசு கடந்த வருடம் செப்டம்பர் மாதமே உங்களுக்கு வேலை செய்ய இங்கு அனுமதி இல்லை என்று கூறிவிட்டது.
அதன்பிறகும் தெற்காசிய நாடுகளுக்கு இங்கிருந்து கொண்டு செய்திகள் அனுப்பி வந்தார். கடந்த மாதமே இவருக்கு வெளிநாட்டவர் கள் பதிவுத்துறை அலுவலகத்திலிருந்து Vanessa Dougnac விற்கு உங்கள் OCI (Overseas Citizan of India) அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டு, பெப்ரவரி 2 ஆம் தேதியன்று பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் பாரதத்தைவிட்டு வெளியே றுகிறேன் என்று Vanessa Dougnac அறிவித் துள்ளார்.
வழக்கம் போல் இடதுசாரி, செக்யூலர் ஊடக ஆதரவாளர்கள் இவரை ஆதரித்துக் குரல் எழுப்பி வருகின்றனர். இது ஒன்றே போதும் எப்படி அவரது செய்திகள் இருந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். பாரத நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப் பிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில், செய்திகள் கட்டுரைகள் இருக்குமானால் அவைகள் நாட்டிற்குள் அமைதியின்மை யைத் தோற்றுவிக்கும் என்றால் அம்மாதிரி யான வெளிநாட்டு ஊடவியலாளர்களை பாரதத்தைவிட்டு வெளியேற்றுவது அரசின் கடமையாகும். மத்திய அரசின் இந்நடவடிக்கையைப் பாராட்டுவோம். வரவேற்போம்.
Vanessa Dougnac கடந்த 23 ஆண்டுகளாக பாரதத்திலிருந்து பல நாடுகளுக்கு செய்திகள் அனுப்பி வந்தவர். பாரதீயர் ஒருவரையே மணம் முடித்துள்ளார். ஃப்ரான்ஸ் நாட்டின் Le Point and La Croix என்ற பத்திரிகைக்கும், பெல்ஜியம் மற்றும் சுவிஸர்லாந்து நாட்டுப் பத்திரிகைகளுக் கும் தில்லி யிலிருந்து செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here