மனிதகுலத்திற்காக வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட #மாதவ_சதாசிவ_கோல்வல்கர் #குருஜி ஜென்ம தினம் இன்று

0
158

தனக்காக வாழாமல், இந்த சமூகத்திற்காகவும்,மனிதகுலத்திற்காகவும் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர் குருஜி. வாழ்நாள் முழுவதும் அவர் எண்ணிலடங்கா தியாகங்களை தேச வளர்ச்சிக்காக செய்துள்ளார்.
1906-ம் ஆண்டு பிறந்த இவர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதுநிலை கல்வியில் முதல் பிரிவில் தேர்ச்சி பெற்றார். சென்னை மையத்தில் ஆராய்ச்சி செய்வதற்கு அவருக்கு அனுமதி கிடைத்தது. பொருளாதார தடையால், ஆராய்ச்சியை பாதியில் நிறுத்தி விட்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலேயே ஆசிரியராக பணியாற்றினார். சட்டமும் படித்தார்.
ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் சுவாமி அகண்டாந்தாரின் வழிகாட்டுதல்படி, தியாகம் மற்றும் பற்றற்ற நிலை ஆகியவற்றின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்தார்.
இந்து தர்மத்தில் தியாகங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால், ஒருவர் தனது கடமையை தியாகம் செய்வது பாவமாக கருதப்படுகிறது என்பதை உணர்ந்தார்.
தேச மற்றும் சமூக விழிப்புணர்வை எடுத்துச்செல்வதற்கு கேசவ் பலிராம் ஹெட்கேவார் துவக்கிய RSS சிறந்தது என கண்டுகொண்டார்.
ஒரு தலைவரின் பணி, தன்னார்வலர்களை உருவாக்குவது, அவர்களை நற்குணங்கள் நிறைந்தவர்களாகவும், ஒப்படைக்கபட்ட பணிகளை அர்ப்பணிப்புடன் செய்து, தேசத்திற்காக தங்கள் வாழ்நாள் முழுவதையுமே தியாகம் செய்யக்கூடியவர்களாக ஆக்குவது என்பதை உணர்ந்தார்.
கிளர்ச்சியான பேச்சுக்கள் குறுகிய கால பலன்களையே அளிக்கும். பேச்சில் பணிவு இருந்தால் மட்டுமே அது நீண்டகால பயனைத்தரும் என்ற ஹெட்கேவாரின் நம்பிக்கை குருஜியிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. எனவே நாட்டிற்காக நாம் உழைக்கும்போது, நமது பேச்சில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். இளகிய மனம் கொண்டவராக இருக்க வேண்டும்.
நாடென்பது ஒரு துண்டு நிலமோ அல்லது அரசியல் ஆட்சி நடைபெறும் இடம் என்பதன் அர்த்தமோ அல்ல, நம்மை பேணிக்காக்கும் தாய் என்ற விவேகானந்தர் மற்றும் அரபிந்தோவின் வாக்குகளை ஏற்றுக்கொண்டார்.
அவர் உலக வாழ்க்கையை துறந்தால், அவரது பரம்பரைக்கு என்னவாகும் என்று அவரது பெற்றோர் கூறியபோது, குருஜி எனக்கு குடும்பத்தில் நம்பிக்கையில்லை. எனது லட்சியம் சமூகத்தின் நலன் ஒன்றே என்று உறுதியாக கூறியதன் மூலம், அவரின் தேசப்பற்று எவ்வளவு சிறந்தது என்று தெரிகிறது.
ஆர்.எஸ்.எஸ் -ன் இரண்டாவது தலைவராக நாடு முழுவதும் சுற்றுபயணம் செய்து அமைப்பை வளர்த்தவர். ஒவ்வொரு துறைகளுக்கும் ஒவ்வொரு விதமான செயல்பாடுகள் தேவை என்பதை உணர்ந்து RSS சகோதர இயக்கங்களை உருவாக்கியவர்.
#msgolwalkarji #சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here