பழனி தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தான நிர்வாகத்தில் பலவிதமான முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
இந்த சமயத்தில் கடந்த 12/3/2024 செவ்வாய்க்கிழமை அன்று எந்தவித ஆவணங்களும் இல்லாமல் தேவஸ்தானம் ஓர் கனரக வாகனத்தில் பெரிய பெரிய கேன்களில் பஞ்சாமிர்தத்தை எடுத்துக்கொண்டு செல்வது தெரிய வந்தது. அந்த வாகனத்தை எமது பொறுப்பாளர்கள் பிடித்து உரிய ஆவணங்கள் இல்லாததால் அதை காவல்துறையில் ஒப்படைத்து அதற்கான CSR-ரும் பெற்றுள்ளனர்.
அதை விசாரித்ததில் அதில் கெட்டுப்போன பஞ்சாமிர்தம் இருந்தது தெரியவந்தது. இதற்காக சம்பந்தப்பட்ட பழனி தேவஸ்தான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் தவறை கண்டுபிடித்து கண்டித்த எங்கள் விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த பொறுப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்செயலை விசுவ ஹிந்து பரிஷத் வன்மையாக கண்டிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறை தட்டி கேட்ட எங்கள் பொறுப்பாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும். தவறும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் மக்களை திரட்டி மாபெரும் போராட்டங்கள் நடைபெறும் என்பதை விசுவ ஹிந்து பரிஷத் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறது.