கேரளாவில் முன்பு முஸ்லிமாக இருந்தவர்களுக்கான அமைப்பு

0
511

கேரளாவில் இஸ்லாமிய சமயத்தை துறந்தவர்கள் ‘கேரளாவின் முன்னாள் முஸ்லீம்கள்” என தங்களுக்கென ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளனர். இந்த அமைப்பு ஜனவரி 9ம் தேதி “முன்னாள் முஸ்லிம்கள் தினம்” என்று அனுசரிக்கின்றனர்.
இந்த அமைப்பின் தலைவர் லியாக்கத்தலி இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். “பல முஸ்லிம்கள் தங்கள் மதத்தை கைவிட்டுள்ளனர், ஆனால் சமூகத்தின் பின்விளைவுகளைக்கண்டுஅஞ்சுவதால் அதை வெளிப்படையாக அறிவிக்கத் தயங்குகிறார்கள். பலர் மதத்தை கைவிட்டு தங்கள் அடையாளத்தை மறைத்து வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்கள் குடும்பத்தினரிடமிருந்தும் ஆதரவைப் பெறத் தவறிவிடுகிறார்கள் மற்றும் அவர்கள் வேலை செய்யும் இடங்களில் குறிவைக்கப்படுகிறார்கள். மதத்திலிருந்து வெளியே வரத் தயாராக இருக்கும் மக்களுக்கு நாங்கள் ஆதரவையும் தைரியத்தையும் கொடுக்க விரும்புகிறோம். மதத்தை கைவிடுபவர்களை அச்சமின்றி வாழ அனுமதிக்க வேண்டும்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here