இந்து மதத்திலிருந்து பிரிந்து ஒருவன் வேறு மதத்தில் சேர்ந்து விட்டால் நமது எண்ணிக்கையில் ஒருவர் குறைவது மட்டுமல்ல எதிரிகளின் எண்ணிக்கையில் ஒருவர் அதிகரித்து விட்டார் என்று அர்த்தம் என சுவாமி விவேகானந்தர் கூறினார் .1947ல் நாடு சுதந்திரம் அடைவதற்கு முதல் நாளே மதரீதியாக ஒரு பகுதி பிரிந்ததும் இன்றுவரை அவர்கள் நமக்கு எதிரியாக இருந்து வருவதையும் கண்கூடாக பார்க்க முடியும். ஒவ்வொரு நாளும் தினசரி பத்திரிக்கையில் நம் நாட்டிற்கு எதிரான செயல்களை செய்ய முயன்றதும் அதனை நமது ராணுவ வீரர் முறியடித்த செய்தியும் பார்க்கமுடிகிறது. 7 பிப்ரவரி மாதம் முன்னாள் உப ராஷ்ட்ரபதி ஹமீத் அன்சாரி அவர்கள் அமெரிக்காவில் நமது எதிரிகளால் நடத்தப்பட்ட மாநாட்டில் கலந்துகொண்டு நம் தேசத்திற்கு எதிராக பேசியுள்ளார். மேற்கே பாகிஸ்தான் என்றால் வடகிழக்கே தனி மாகாணம் கேட்கும் அளவிற்கு கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் உயர்ந்துள்ளார்கள். ஆசைகாட்டி பெரும்பாலான மக்களையும் அச்சுறுத்தி மீதியுள்ள மக்களையும் மதம் மாற்றி வருகின்றனர் இந்த கிறிஸ்தவ மிஷனரிகள். கிறிஸ்தவ மதத்தின் மிக உயரிய மரியாதைக்குரிய பொறுப்பில் உள்ள பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கூட பாரதமாதா மேலுள்ள அசிங்கங்கள் என் மேல் படக்கூடாது என்பதற்காக நான் செருப்பு அணிந்து செல்வதாக கூறி உயர்நீதிமன்றத்தின் கண்டனத்தையும் சந்தித்திருக்கிறார் .பள்ளி சிறுமி லாவண்யா பலியானது நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. ஆகவே கர்நாடகா கொண்டுவந்துள்ள மதமாற்ற தடை சட்டம் நம் தேசத்திற்கான பாதுகாப்பு என்று கூறினால் மிகையாகாது. ஒட்டுமொத்த பாரதத்திற்கும் அது தேவையே.
சந்திரசேகர்ஜி