உடுமலை அருகே சாலையோரம் இளநீர் விட்டு வருகிறார் தாயம்மாள். அவரது ஊரில் உள்ள அரசு பள்ளியில் போதிய கட்டிட வசதி இல்லை.
இதற்காக தான் இளநீர் விற்று சேமித்த பணத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை பள்ளி கட்டிடம் கட்ட நன்கொடை அளித்தார்.
இவரது அரிய செயலை பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டிப் பேசினார்.