பிரதமரின் இ – பஸ் திட்டம் ; திருச்சி உட்பட 11 நகரங்கள் தேர்வு

0
145

தமிழகத்தில் கோவை, மதுரை உள்ளிட்ட, 11நகரங்கள், பிரதமரின் இ – பஸ் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுதும், 100 நகரங்களில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ், அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
பகுதிகளில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த ‘பிரதமரின் இ – பஸ்’ என்ற பெயரில், புதிய திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. நாடு முழுதும், 169 நகரங்களில், 10,000 இ – பஸ்கள் இயக்க, 20,000 கோடி ரூபாயை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை: பிரதமரின் இ – பஸ் திட்டத்தில், தமிழகத்தில், 3 லட்சத்துக்கும் மேலான மக்கள் வசிக்கும் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதன்படி, முதற்கட்டமாக, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர், திருநெல்வேலி, துாத்துக்குடி, வேலுார், ஆவடி, அம்பத்துார் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த நகரங்களில் இ – பஸ் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு அனுப்ப வேண்டும். இ – பஸ் திட்டத்தில், 10 ஆண்டுகளுக்கான செலவுக்கான நிதியையும், மத்திய அரசே வழங்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன்படி, தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்த முடிவை, தமிழக அரசு விரைவில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here