பிரபலமான SabLokTantra யூடியூபர் ரசித் கௌஷிக் கைது

0
165

ரசித் கௌஷிக், பிரபலமான SabLokTantra You Tube Chennel நடத்தி வந்தவரை பஞ்சாப் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தனது உறவுப் பெண் ஒருவருக்கு திருமணம் ஆதலால் அவரை அழகு நிலையத்திலிருந்து திருமண மண்டபத் திற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது சாதாரண சிவில் உடையில் வந்த காவலர்கள் சிலர் ரசித் கௌஷிக்கை காரிலிருந்து வெளியே இழுத்து பிடித்துக் கொண்டு சென்றுவிட்டனர்.

அவரது குடும்பத்தினரிடம் வழங்கிய முதல் தகவல் அறிக்கையில் (FIR) அவருடைய பெயர் இல்லை. பின் எதற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்பது குடும்பத்தினருக்குத் தெரியவில்லை. இதற்கிடையில் ரசித் கௌஷிக்கின் கைதினை சில கட்சியினர் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடி மகிழ்கின்றனர்.

தங்கள் கட்சித் தலைவரை கௌஷிக் சிறுமைப்படுத்தி விட்டதாக குற்றம் சுமத்தி வருகின்றனர். தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்துள்ள ஊழல்கள் பற்றி கட்டுரை எழுதியதே கௌஷிக்கின் கைதிற்குக் காரணமாகும்.எவ்வித சட்ட விதிமுறைகளையும் கடை பிடிக்காமல் பஞ்சாப் காவல் துறையினர் ரசித் கௌஷிக்கை கடத்திச்சென்று கைது செய்துள்ளனர். பஞ்சாப் காவல் துறை அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதுடன் கேஜரிவாலின் எடுபிடித் துறையாக மாறிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here