ஹைதராபாத். தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள செயின்ட் மேரீஸ் பள்ளி, ‘ஐயப்ப விரதம் ’ கடைப்பிடித்த இந்து மாணவரை தண்டித்ததற்காக, சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் (LRPF), புகார் அளித்துள்ளது.
ஐயப்ப விரதத்தை மேற்கொள்ளும்பொருட்டு10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பாரம்பரிய கருப்புச் சட்டை மற்றும் வேட்டி அணிந்ததற்காக பள்ளி நிர்வாகம் கடந்த நவம்பர் 22 அன்று அவருக்கு அனுமதி மறுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர் தன்னை வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு பள்ளி முதல்வரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தார். ஆனால் நிர்வாகம் மாணவரின் கோரிக்கைக்கு செவி மதுக்கவில்லை. மாணவரை, பள்ளியின் முதல்வர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் வெயிலில் நிற்க வைத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது