இந்திய-மத்திய ஆசிய உச்சி மாநாடு ஜனவரி மாதம் 27 துவங்குகிறது.
ஆன்லைன் மூலம் நடக்கும் இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். கஜகஸ்தான், கிர்கிஸ்தான் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்திய மத்திய ஆசிய நாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் பொருட்டு இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் மட்டத்தில் நடைபெறும் முதல்உச்சிமாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.