‘அக்னிபத்’ போராட்டத்தை தூண்டிவிட்ட நக்சல்  மனஷியாம் தாஸ் கைது

0
208

மத்திய அரசு அக்னிபத் என்ற முப்படைகளுக்கு ஆள் சேர்க்கும் திட்டத்தை அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பீஹார் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.
பீஹாரின் லக்கிம்புர் நகரில், மனஷியாம் தாஸ் என்ற நக்சலைட் பதுங்கியிருப்பதாக பீஹார் போலீசாருக்கு, தெலுங்கானா மாநில போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், மனஷியாம் தாஸ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மனஷியாம் தாஸ், நக்சலைட் அமைப்புடன் நீண்டகாலம் தொடர்புடையவர். இதன் மூத்த தலைவர்களுடன் இவருக்கு தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்தது. அக்னிபத் திட்டத்தை எதிர்த்து பீஹாரில் நடந்த போராட்டத்தின்போது, ரயில்களுக்கு தீ வைக்கும்படி, போராட்டக்காரர்களை இவரும், இவருடன் தொடர்புடைய சிலரும் துாண்டிவிட்டது விசாரணையில் தெரியவந்தது.தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here