இந்தியாவிலேயே முதல் முறையாக முஸ்லிம் மதத்தை வெளியேறுபவர்களுக்கான அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. “முன்னாள் கேரள முஸ்லிம்கள் அமைப்பு” என்னும் இந்த அமைப்பு சமூகவியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
இஸ்லாம் மதத்திற்கென சில தன்மைகள் உள்ளன. அம்மதத்தின் நெறிமுறைகளை மீறுபவர்களுக்கும் அம்மதத்தை நிந்திப்பவர்களுக்கும்,இஸ்லாமிய நாடுகளில் மரணதண்டனை வரை விதிக்கப்படுகிறது. இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் அது போல தண்டனைகள் வழங்கபடாவிட்டாலும் அம்மத நெறிமுறைகளை மீறுபவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.
இப்படிப்பட்ட முஸ்லிம்களின் நலனை கருத்தில் கொண்டே “முன்னாள் கேரள முஸ்லிம்கள் அமைப்பு” என்னும் அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறிய மக்களின் சமூக, சட்டரீதியிலான உரிமைகளை பாதுகாக்கவும் அப்படிப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்வதுமே இந்த அமைப்பின் நோக்கமாகும்.
கேரளாவின் புதியங்குடியைசேர்ந்தவர் அப்துல் காதர். துபாயில் வசித்து வரும் இவர் இஸ்லாமிய மதத்தை கண்டித்ததற்காக துபாய் சிறையில் உள்ளார். அங்கே வசிக்கும் கேரளத்து நபர்களாலேயே இவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்று பல சம்பவங்களைகுறிப்பிடும் முன்னாள் இஸ்லாமியர் ஒருவர் இது போன்று இஸ்லாமிய மதத்தை விமர்சிப்பபவர்களுக்கு இந்தியாவில் சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லை. இப்படிப்பட்ட பாதுகாப்பு அற்ற தன்மை இருப்பது ஜனநாயக நாட்டுக்கு நல்லதல்ல என்று கூறினார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கேரளாவின் முன்னாள் முஸ்லிம்கள் தங்களுடைய பாதுகாப்புக்கென ஒரு அமைப்பை துவங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.