அரியலூர் மாணவி தற்கொலை விசாரணை: தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் குற்றச்சாட்டு

0
331

அரியலூர் மாணவி தற்கொலை விசாரணையில் போதுமான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என தமிழக அரசு மீது தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் குற்றச்சாட்டி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க இந்த ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழு வரும் 30,31 தேதிகளில் பள்ளி அமைந்துள்ள மைக்கேல்பட்டி வர இருக்கிறது. இதன் விசாரணைக்கு உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி தமிழக அரசு போதுமான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என ஆணையம் கூறி உள்ளது.இருப்பினும் திட்டமிட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும் என ஆணையம் கூறி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here