வரலாற்றில் இல்லாத அளவிற்கு இலங்கையில் மிக மோசமான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதுடன் கடந்த 75 வருடங்களில் இல்லாத நிலைக்கு பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. இதன் காரணமாக ஒரே வாரத்தில் இரண்டு முறை சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கையேந்தும் நிலைக்கு சென்றுவிட்டது. இந்த நிலையில் இலங்கைவாசிகள் சிலர் தனுஷ் கோடி பகுதிக்கு படகு மூலம் வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். இந்தியா இலங்கை இடையே 13 மணல் திட்டு உள்ள பகுதியில் கடலோர காவல்படையினர் ரோந்து பணிகளை செய்து வந்தனர். அப்போது தனுஷ் கோடி மூன்றாம் மணல் திட்டு பகுதியில் 1 ஆண், 2 பெண்கள், ஒரு கை குழந்தை, 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் அங்கு இருந்தது தெரிய வந்துள்ளது. அவர்களை உடனே மீட்ட கடலோர காவல்படையினர் கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.