வியாழன் அன்று நள்ளிரவு 1 மணியளவில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர் பெட்ரோல் குண்டை வீசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
நமக்கு கோவிலாக இருக்கும் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு கண்டனம்! இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு தமிழக காவல்துறை அடக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து என்ஐ ஏ விசாரணை தேவை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.